தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட வாழ்க்கை, எளிமை மற்றும் ஒழுக்கத்தால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அஜித் குமார். திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், சினிமாவைத் தாண்டி தனது ஆர்வங்களையும் கனவுகளையும் தொடர்ந்து பின்பற்றும் நடிகராகவும் அறியப்படுகிறார். அதில் மிக முக்கியமான ஒன்று தான் கார் ரேஸிங்.

அஜித் குமாருக்கு கார் ரேஸிங் மீது உள்ள ஆர்வம் இன்று நேற்று உருவானது அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பே, அவர் கார் ரேஸிங் போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்துள்ளார். சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்திலும் கூட, கார் ரேஸிங் பயிற்சிகளை தொடர்ந்தவர் அஜித்.
விபத்துகள், காயங்கள் போன்ற பல சவால்களை சந்தித்தபோதும், ரேஸிங் மீதான தனது ஆர்வத்தை அவர் ஒருபோதும் கைவிடவில்லை. இதுவே அவரை மற்ற நடிகர்களிலிருந்து வேறுபடுத்தும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

சமீப காலமாக, நடிகர் அஜித் குமார் பல சர்வதேச கார் ரேஸிங் போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு வருகிறார். இந்த நிலையில், துபாய் ரேஸிங் களத்தில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டுள்ள புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில், நடிகர் அஜித் குமாரை, மாதவன் சந்தித்துள்ள காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Listen News!