• Jan 30 2026

மணிக்கணக்கா ஆடிசனுக்கு வெயிட் பண்ணேன்.. போன் கூட எடுக்கமாட்டாங்க.! ராகுல் ப்ரீத் பகீர்

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் பல மொழிகளில் வெற்றிகரமாக பயணித்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் ராகுல் ப்ரீத் சிங். தெலுங்கு, தமிழ், ஹிந்தி என தொடர்ந்து பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து, இன்று தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அவரது அழகும், நடிப்பு திறனும், தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் அவரை ரசிகர்களிடையே பிரபலமாக வைத்திருக்கின்றன.


தமிழ் சினிமாவில், “தீரன் அதிகாரம் ஒன்று”, “என்.ஜி.கே”, “அயலான்”, “இந்தியன் 2” போன்ற முக்கியமான படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் தனது திறமையை நிரூபித்துள்ளார். குறிப்பாக, தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.

ராகுல் ப்ரீத் சிங் தனது திரைப்படப் பயணத்தை தெலுங்கு சினிமாவில் ஆரம்பித்தாலும், குறுகிய காலத்திலேயே பல மொழிகளில் நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உருவான அவர், தமிழில் முக்கியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.

பின்னர் பாலிவுட்டிலும் தனது இடத்தைப் பிடிக்க முயற்சி செய்தார். இந்த பயணம் எளிதானதாக இல்லை என்பதையே அவர் தற்போது வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.


சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், பாலிவுட் திரையுலகில் அறிமுகமான ஆரம்ப காலத்தில் அவர் சந்தித்த அனுபவங்களை ராகுல் ப்ரீத் சிங் மனதார பகிர்ந்துள்ளார்.

அவர் அதன்போது, “நான் பாலிவுட்டில் அறிமுகமானபோது, என்னை ஒரு புதிய நடிகையாகத் தான் பார்த்தார்கள். நடிகர்கள், இயக்குநர்களுக்கு நான் போன் பண்ணினால் கூட எடுக்க மாட்டார்கள். ஒரு படத்தின் ஆடிஷனுக்காக அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த அனுபவம் எனக்கு உண்டு.” என்று  கூறியுள்ளார். 

Advertisement

Advertisement