சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், பார்வதி ஏஞ்சல் டிரஸ்ஸில் கதை சொல்லி முடித்த பிறகு, தனக்கு ஒரு சின்ன ஆசை இருப்பதாகவும் அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் சிவன் கூறுகிறார். அதன்படி இந்த ஏஞ்சலுடன் டான்ஸ் ஆட வேண்டும் என சிவன் சொல்ல, இருவரும் பாடல் போட்டு சந்தோஷமாக டான்ஸ் ஆடுகின்றனர்.
அந்த நேரத்தில் பார்வதியின் வீட்டிற்கு விஜயாவும் சிந்தாமணியும் வருகின்றனர். இதைக் கண்ட விஜயா, 'நான் இங்கே தனியாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, நீ சந்தோஷமாக டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறாயா?' என்று பார்வதியை கடுமையாக திட்டுகிறார். தொடர்ந்து, ஸ்ருதி வீட்டை விட்டுச் சென்ற விஷயத்தையும் நீத்து செய்த காரியத்தையும் பற்றி விஜயா பார்வதியிடம் சொல்லுகிறார்.
இதனைத் தொடர்ந்து, மீனாவின் பூக்கடையைத் திறந்து வைப்பதற்காக அனைவரும் அங்கு செல்கின்றனர். அங்கு வந்த விஜயா வழக்கம்போல் மீனாவை மட்டம் தட்டி பேசுகிறார். மேலும், 'எனக்கு வந்த ஆர்டருக்குப் பிறகே நீ அங்க போய் பூ ஆர்டர் எடுத்திருக்கிறாய்' என்று மீனாவை குற்றம் சாட்டுகிறார் மனோஜ். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், புதிய கடையை ஆரம்பிப்பதற்கு முன் முறையாக பூஜை செய்து கடை திறப்பு விழாவை நடத்துகின்றனர் முத்துவும் மீனாவும்.

அனைவரும் ஒன்றாக இருக்கும் போது, யாரும் எதிர்பாராத வகையில் ரோகிணி அங்கு வந்து விடுகிறார். 'இங்கே நல்ல விஷயம் நடக்கப் போகிறது, நீ பிரச்சினை செய்யாமல் போய்விடு' என்று மீனா கூறினாலும், 'நான் உங்கள் பூக்கடை ஓப்பனுக்கு வரவில்லை, என்னை மேனேஜர் தான் வரச் சொன்னார்' என்று ரோகிணி கெத்தாக நிற்கிறார்.
இறுதியில் மேனேஜர் வந்து, 'பூக்கடை திறப்பு முடிந்த பிறகு மீதியெல்லாம் பேசலாம்' என்று ரோகிணியிடம் கூறி அங்கிருந்து செல்லுகிறார். பின்பு அண்ணாமலை மீனாவின் கடையை திறந்து வைக்கிறார்.இதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
Listen News!