• Jan 30 2026

விஜய்யுடன் ஒப்பிட வேண்டாம்.! அரசியல் குறித்து சரத்குமார் வெளியிட்ட அதிரடிக் கருத்து

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனித்துவமான பயணத்தை மேற்கொண்டவர் நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார். நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்ற அவர், அரசியல் களத்திலும் தன்னுடைய தடத்தை பதிக்க முயன்றவர். 


இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில், நடிகர் விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சரத்குமார் அளித்த பதில், பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

சரத்குமார் தனது அரசியல் வாழ்க்கை குறித்து பேசுகையில்,“என்னுடைய அரசியல் வாழ்க்கையில் நான் நிறைய அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன்.” என்று குறிப்பிட்டார். மேலும், அவர் தொடங்கிய கட்சி, அதன் வளர்ச்சி, பின்னர் எடுத்த முடிவுகள் ஆகியவற்றின் அனுபவத்தையும் கூறினார். 

அத்துடன், “நான் கட்சியைக் கலைத்ததையும், விஜயையும் ஒன்றாக சேர்த்து பேச வேண்டாம்.என்னுடைய அரசியல் பயணம் வேறு, விஜயின் பயணம் வேறு.” என்று வலியுறுத்தினார். பேட்டியில், நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சரத்குமார் இவ்வாறு அளித்த பதில் தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement