• Jan 30 2026

கமல்ஹாசனை பாராட்டித் தள்ளிய கவிஞர் வைரமுத்து.. டுவிட்டரில் வெளியான பதிவு.!

subiththira / 19 hours ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டின் முன்னணி நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திரைப்படத் துறையிலும் அரசியலிலும் தனித்துவமான இடத்தை பிடித்தவர். நடிப்பு, கதைத் தேர்வு என்பவற்றில் வலிமை காட்டியவராக திகழ்கிறார் கமல் ஹாசன்.


இந்நிலையில், கமல்ஹாசன் தற்போது 235வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார், அதற்கு முன்பும் திரையுலகில் வெளிப்படும் அவரது பங்களிப்புகள் மற்றும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேச்சு பரப்பப்படுகிறது.

சமீபத்தில், கமல்ஹாசனின் நாடாளுமன்ற உரை தொடர்பாக கவிப்பேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளிப்படையான பாராட்டுக்களை பதிவு செய்தார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது. 


வைரமுத்து தனது பதிவில், “மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் அவர்களின் நாடாளுமன்ற உரையை ஆசையோடு வாசித்தேன். SIR குறித்து அரிய தரவுகளோடு ஒரு சட்ட வாசகம்போல் கட்டமைக்கப்பட்ட அந்த உரை அவரைப் பாராட்டப் பணித்தது...” என்று கூறியிருந்தார். 

இந்த கருத்து, சமூக வலைத்தளங்களில் விரைவாக பரவியது. ரசிகர்கள் இக்கருத்து வெளியானதிலிருந்து பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement