பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுடர் பாக்கியம் கிட்ட கோமதி குடும்பமும் அவங்க அண்ணா குடும்பமும் ஒன்னா சேர்ந்திடுச்சு என்று போட்டோவைக் காட்டுறார். அதைப் பார்த்த பாக்கியம் ஷாக் ஆகுறார். பின் பாக்கியம் மூத்த மருமகள் இல்ல என்ற கவலை இவங்க யாருக்காவது இருக்கா என்று கேட்க்கிறார். அந்த நேரம் பார்த்து மயில் அங்க போய் அந்த போட்டோவைப் பார்த்தவுடனே அழுகிறார்.

மறுநாள் காலையில, கோமதி சாமி முன்னாடி நான் பொய் சொல்லணும் என்று கனவில கூட நினைக்கல... இந்த விஷயத்தை மறைச்சதுக்காக அவர் இப்புடி கோபப்படுறது நியாயம் இல்ல என்று சொல்லிப் புலம்புறார். அதனைத் தொடர்ந்து, சரவணன் கோமதியைப் பார்த்து நீ எப்பவும் சிரிச்சிட்டு இருந்தால் தான் அழகா இருப்ப என்கிறார். அதுக்கு கோமதி இருக்கிற பிரச்சனையில் சிரிச்சிட்டு வேற இருக்கணுமா என்று கேட்கிறார்.
பின் கதிர் கோமதியைப் பார்த்து உங்க புருஷன் வந்து பேசுவாரு கவலைப்பட வேண்டாம் என்கிறார். மறுபக்கம் ராஜி செய்ததெல்லாத்துக்கும் மன்னிப்புக் கேட்கிறார். அதனைத் தொடர்ந்து பாண்டியன் கோமதியைப் பார்த்தவுடனே என்கூட யாரும் வந்து பேசக் கூடாது என்கிறார். மேலும், திரும்ப திரும்ப வந்து பேசிக்கொண்டு இருந்தால் நிஜமாவே எங்கயாவது போயிடுவேன் என்கிறார்.

பின் கதிர் கோமதியைப் பார்த்து அப்பாவுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கச் சொல்லுறார். அதனை அடுத்து மயில் மீனா ஆபீஸுக்குப் போய் என்னை வீட்ட விட்டு வெளிய அனுப்பிட்டு நீங்க எல்லாரும் சேர்ந்து சந்தோசமாக இருக்கீங்க என்கிறார். அதைக் கேட்ட மீனா இது என்னோட ஆபீஸ் இங்க வந்து அழாதீங்க.. கிளம்புங்க என்கிறார். பின் கோமதி பாண்டியனுக்காக கடைக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!