விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது பரபரப்பான கதைகளத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் ரோகிணியின் உண்மையான விபரங்கள் எப்போது வீட்டிற்கு தெரியவரும் என்பது கதையின் ட்விஸ்ட்டாக காணப்பட்டது.
இவை அத்தனையும் யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் மொத்தமாக போட்டு உடைக்கப்பட்டது. இதனால் தற்போது விஜயா குடும்பத்தில் இருந்து விலகி தனித்து வாழ்ந்து வருகிறார் ரோகிணி.
ஆனாலும் அவர் நான் மீண்டும் மனோஜுடன் சேர்ந்து வாழ்வேன் என்பதில் உறுதியாக இருக்கின்றார். ஆனால் விஜயாவும் மனோஜும் அவருக்கு டிவோர்ஸ் கொடுப்பதற்கு விவாதித்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம் மீனா தனது சொந்த முயற்சியால் முன்னேறி வருகின்றார். அதன்படி புதிதாக பூக்கடை ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். அதனை அண்ணாமலை ஆரம்பித்து வைத்தார். விஜயாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் தனது பங்கிற்கு அவர் பூக்கடை ஓபனிங்கிற்கு வந்திருந்தார்.

இந்த சீரியலில் இனி மனோஜூம் ரோகிணியும் சேர்வார்களா என்பது தான் கதைக்களமாக காணப்படுகின்றது. மனோஜ் எவ்வளவு படித்திருந்தாலும் அதில் முட்டாளாக காணப்படுகின்றார். இதனால் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதற்கு ரோகிணி திட்டம் திட்டி வருகின்றார்.
அதன்படியே தற்போது 60 பிளாட்டுக்கு டீல் போட்டுள்ளார் ரோகிணி. இதனால் மனோஜுடன் பிசினஸ் பார்ட்னராக ஆகின்றார். மேலும் லைஃப் பார்ட்னரும் நான்தான் என்று மனோஜ்க்கு சவால் விடுகின்றார்.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் கேரக்டரில் நடிக்கும் பழனி அப்பன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ரோகிணி, மனோஜுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
எனவே இனிவரும் எபிசோடுகளில் மனோஜூம் ரோகிணியும் ஒன்று சேர்வார்களா? விஜயாவின் நிலை என்னவாக போகின்றது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
Listen News!