சினிமா உலகில் சமீபத்தில் பரபரப்பான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில், பிரபல நடிகர் போஸ் வெங்கட் சமீபத்தில் வெளிப்படுத்திய கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்திய பேட்டியில், விஜய்யை எதிர்த்து பேசும் குடும்பத்தையே குற்றம் சுமத்துகிறார்கள் என நடிகர் வெளிப்படுத்திய குற்றச்சாட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் அதன்போது,“விஜய்யை எதிர்த்து எவன் பேசினாலும், அவங்க குடும்பத்தையே கிழிச்சிடுறானுங்க. அப்ப இவனுங்களுக்கு எல்லாம் குடும்பம் இல்லையா? அக்கா இல்லையா? தங்கச்சி இல்லையா? என்ன விதமான மனநிலை இது? இந்த மன நிலையை ஊட்டியது யார்? நீ எல்லாம் என்ன படிச்சிருக்க? மாத்தி ஏதும் சாப்பிடுறியா? இவர்களை எல்லாம்திருத்த வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
இந்த கருத்து, ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி விமர்சனங்கள் மற்றும் எதிர்மறை கருத்துக்கள் என்பன உருவாகி வருகின்றன.
Listen News!