தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களை குறிவைத்து, உருவாகும் படங்களில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் படம் தான் ‘இதயம் முரளி’. Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உருவாகும் இந்த படம், அந்த நிறுவனத்தின் 4-வது படைப்பாக உருவாகி வருகிறது. படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் இளம் நடிகர் அதர்வா முரளி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதல், உணர்வு மற்றும் நவீன இளைய தலைமுறையின் வாழ்க்கை முறை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
‘இதயம் முரளி’ படத்தின் டைட்டில் அறிவிப்பும், டீசரும் வெளியாகிய உடனேயே சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. படத்தின் டைட்டிலே ஒரு மென்மையான காதல் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. குறிப்பாக டீசரில் இடம்பெற்ற காட்சிகள், இசை மற்றும் அதர்வாவின் லுக் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
‘இதயம் முரளி’ படத்தில் அதர்வாவுடன் சேர்ந்து, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் கதையில் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் எஸ் பணியாற்றி வருகிறார். தமன் இசையமைக்கும் படங்களுக்கு எப்போதுமே இளைஞர்களிடையே தனி வரவேற்பு இருக்கும். அதே எதிர்பார்ப்பு தான் ‘இதயம் முரளி’ படத்திற்கும் உருவாகியுள்ளது.

இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் 2-வது சிங்கிளான ‘தங்கமே, தங்கமே’ பாடல் நேற்று வெளியாகியது. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறிப்பாக, ‘தங்கமே, தங்கமே’ பாடல் வெளியான கொஞ்ச நேரத்திலேயே யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
Listen News!