• Jan 30 2026

புதிய கெட்டப்பில் உருகி உருகி பேசிய ரோகிணி.. மனோஜ் எடுத்த அதிரடி முடிவு

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  மீனா திறந்து வைத்த பூக்கடையில் முதலாவதாக   அண்ணாமலை பூ வாங்கி விஜயாவுக்கு கொடுக்கின்றார். மேலும் இந்த கடை 100க்கடையாக பெருக வேண்டும் என்று ஆசிர்வாதம் வழங்குகின்றார். 

அதற்குப் பிறகு  மனோஜுடன் பேசிய மேனேஜர்,  ரோகிணி மூலம் தான் உனக்கு இந்த ஆர்டர் கிடைத்தது.  முதலில் 60 வீடுகளுக்கு ஆர்டர் கொடுங்கள் என்று சொல்லுகிறார். ஆனாலும் விஜயா  இந்த ஆர்டர் வேண்டாம் என்று சொல்ல, அண்ணாமலை தடுக்கின்றார். 

இன்னொரு பக்கம்  முத்துவும் செல்வமும்  நீத்துவின் ரெஸ்டாரண்டுக்கு சென்று  ரவியின் பிரச்சினை பற்றி பேசுகின்றார்கள். ஆனாலும் அவர் தான் ரவியை காதலிப்பதாக சொல்கின்றார். இதனால்  இப்படியே போனால் நீயும் இருக்க மாட்டா,  உன் ரெஸ்டாரண்டும் இருக்காது என்று முத்து மிரட்டி விட்டு வருகின்றார். 


 அதன் பின்பு  மனோஜின் ஸ்டோர் ரூமுக்கு புது ஸ்டைலில் வருகிறார் ரோகிணி.  ஆரம்பத்தில் அவரை பார்த்ததும் மனோஜ் திட்டுகின்றார். ஆனாலும் நாங்க இப்போ பிசினஸ் பார்ட்னர் என்று  ரோகிணி உருகி உருகி கதைக்கின்றார். 

இறுதியில் அவர் போன பின்பு,  ரோகிணி அருகில் வந்தாலே ஏதோ ஒரு மாதிரி இருக்கின்றது. அதனால் நான் சாமியாராக போகின்றேன் என்று மனோஜ் சொல்லுகின்றார்.  இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement