• Jan 30 2026

வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்ல... நடிகை ராஷ்மிகா காட்டம்.!

subiththira / 21 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமா முழுவதிலும் மிக அதிக ரசிகர்கள் கொண்ட நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. தனது எளிமையான நடிப்பு, இயல்பான வெளிப்பாடு மற்றும் சமூக வலைத்தளங்களில் உள்ள பிரபலத்தால் இளம் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ள ராஷ்மிகா, சமீப காலமாக பல்வேறு வதந்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வருகிறார்.


இந்த நிலையில், தனது பெயரை பயன்படுத்தி பரப்பப்படும் பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகள் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறிய இந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டியில், “வதந்திகளை பரப்புபவர்களுக்கு பதில் சொன்னால், அது அவர்களை ஊக்குவிப்பது போலாகிடும். அதனால் நான் அவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. முகம் தெரியாதவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.பணத்திற்காகச் சிலர் என்னைப் பற்றி பொய்யான பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர்.”என்று கூறியுள்ளார். 

இந்த வார்த்தைகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, சினிமா பிரபலங்கள் மீது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விமர்சனங்கள் மற்றும் வதந்திகளுக்கு எதிரான ஒரு திடமான பதிலாக இந்த கருத்து பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement