• Jan 30 2026

நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிராக பாய்ந்த புகார்.! பாலிவுட்டில் அதிர்ச்சி

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

கடந்த  வருடம்  கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் கடைசி நாளில் ரன்வீர் சிங் கலந்து கொண்ட போது காந்தாரா சாப்டர் 1 படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ரிஷப் செட்டி  நடித்தது போல் நடித்து கிண்டல் செய்து இருந்தார்.

மேலும்  கடலோர கர்நாடகத்தில் புனித தெய்வமாக கருதப்படும் சாமுண்டி தெய்வத்தை போலவே சைகைகளும் செய்தார்.  இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பின்பு அவர் பலரிடம் மன்னிப்பு கேட்டார். 

இந்த நிலையில், சாமுண்டி தெய்வ மரபை அவமதித்ததாக நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிராக பெங்களூருவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கோவாவில் கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) நிறைவு விழாவின் போது நடந்த சம்பவம் தொடர்பாக இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் விவரங்களின்படி, மேடையில் இருந்த போது நடிகர் ரன்வீர் சிங், பஞ்சுர்லி / குலிகா தெய்வத்துடன் தொடர்புடைய தெய்வீக வெளிப்பாடுகளை கேலியும் அசிங்கமான முறையிலும் பாவனை செய்ததாகவும், ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி முன்னிலையில் சாமுண்டி தெய்வத்தை “பெண் பேய்” என குறிப்பிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 


தெய்வம் தொடர்பான கிண்டல்களை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட பின்னரும் அவர் தொடர்ந்து அவ்வாறு செயல்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரை பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் மேதல் என்பவர் அளித்துள்ளார். அவர் சாமுண்டி தெய்வத்தின் பக்தர் என்றும், கடலோர கர்நாடகத்தில் நடைபெறும் பாரம்பரிய பூத கோலா வழிபாட்டில் போற்றப்படும் சாமுண்டி தெய்வம் தனது குடும்ப தெய்வம் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் நடிகரின் செயல் திட்டமிட்டதாகவும், மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும், சமூக ஒற்றுமையை பாதிக்கும் வகையிலானது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சாமுண்டி தெய்வம் நீதி, பாதுகாப்பு மற்றும் தெய்வீக பெண் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் காவல் தெய்வமாக போற்றப்படுவதாகவும், அதனை ‘பேய்’ என குறிப்பிடுவது இந்து மத நம்பிக்கைகளுக்கு கடும் அவமதிப்பாகும் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வரும் ஏப்ரல் 8ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 27ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட புகாரின் அடிப்படையில், ஜனவரி 23ஆம் தேதி ஹை கிரவுண்ட்ஸ் காவல்துறைக்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, பாரதிய நியாய சனிதா (BNS) சட்டத்தின் பிரிவுகள் 196, 299 மற்றும் 302 ஆகியவற்றின் கீழ் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement