வெங்கட் பிரபு - அஜித் குமார் கூட்டணியில் வெளியான மங்காத்தா திரைப்படம் கடந்த 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆனது. இந்த படத்தை அஜித் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினார்கள், வசூலிலும் பட்டையை கிளப்பியது.
கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமாவில் ஹிட் ஆன படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விஜயின் கில்லி, ரஜினியின் படையப்பா, சூர்யாவின் அஞ்சான் போன்ற பல படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
2011ம் ஆண்டு மங்காத்தா படம் வெளியான போதே மிகப்பெரிய ஹிட் கொடுத்தது, வசூலிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. யாரும் ஏற்கத் தயங்கும் ரோலை ஏற்று அசால்ட்டாக நடித்து இருந்தார் அஜித்.
அந்த படத்தில் அஜித்தின் நடிப்பு மட்டும் அல்லாமல் யுவன் சங்கர் ராஜாவின் இசையும், வெங்கட் பிரபுவின் இயக்கமும், அர்ஜுனின் மிரட்டலான நடிப்பும் ரசிகர்களுக்கு முழு திருப்தியை கொடுத்தது.

இதைத்தொடர்ந்து மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆனபோது ரசிகர்கள் தங்களுடைய முது ஆதரவையும் கொடுத்தனர். எனினும் புதிதாக ரிலீசான திரௌபதி 2 படத்தை மங்காத்தா படம் மொத்தமாக காலி செய்து விட்டது என அதன் இயக்குனர் வேதனை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், மங்காத்தா படத்தின் ஆறாவது நாளான வசூல் வெறும் 12 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தமாக கடந்த ஆறு நாட்களில் 11.52 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபீசில் தற்போது சரிவை சந்தித்து வருகின்றது மங்காத்தா.
Listen News!