dragon படத்தின் ப்ரி-ரிலீஸ் விழாவின் போது இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியாக கதைத்துள்ள வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறுகையில், சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல, அது மனிதர்களின் கனவுகளை திரையில் வெளிப்படுத்தும் ஒரு சக்தியாகவும் விளங்குகிறது.
மேலும் , கடைசி வரை முயற்சி செய்பவர்களுக்கே வெற்றி என்று கூறிய விக்னேஷ் சிவன், "நான் என்னுடைய இயக்குநர் கனவை பல வருடங்களாக துரத்திக்கொண்டு இருந்தேன். ஆனால், இந்த முயற்சி மட்டுமே எனக்கு வெற்றியைத் தந்தது" என்று உணர்ச்சியுடன் பேசினார். அத்துடன் "ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் தடைகள் எதிர்கொள்வார்கள். ஆனால், அதை கடந்து செல்வது தான் உண்மையான வெற்றி!" என தனது அனுபவத்தைப் பகிர்ந்தார்.
அதுமட்டும் இல்லாது பிரதீப்பிற்கு நான் கடமைப்பட்டிருக்கேன் என தெரிவித்தார். மேலும் ‘Dragon’ திரைப்படம், மிகுந்த ஆக்ஷன் மற்றும் உணர்வுபூர்வமான திருப்பங்களுடன் உருவாகியுள்ளது என்றதுடன் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் புதிய உச்சத்தை தொடும் என்றும் கூறினார். அத்துடன் ‘Dragon’ வெற்றி பெறுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்! என உணர்ச்சி பூர்வமாக கூறியுள்ளார்.
மேலும் விக்னேஷ் சிவன் தனது உரையின் போது தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பை வலியுறுத்தி பேசியுள்ளார். அத்துடன், "ஒருவரின் பயணத்தில் வெற்றி என்பது கடைசி கட்டத்தில் கிடைக்கக்கூடியது. அதை நோக்கி தொடர்ந்து செல்லுங்கள்" என்ற அவரது வார்த்தைகள் பல இளைஞர்களுக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. அத்துடன் இந்த உரை மூலம் ரசிகர்களுக்கு , 'Dragon' படம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
Listen News!