பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட், ராதிகாவுக்கும் கோபிக்கும் இடையே உள்ள உறவு நீதிமன்றத்தில் வைத்து சட்ட ரீதியாக பிரிக்கப்படுகின்றது. மேலும் கோபியிடமிருந்து ஜீவனாம்சம் எதுவும் வேணுமா என்று கேட்க, ராதிகா எதுவுமே வேண்டாம் என்று தனக்கு டிவோர்ஸ் மட்டும் போதும் என்றும் சொல்லுகின்றார்.
இதை தொடர்ந்து ராதிகா வெளியே வர அங்கு பாக்கியா அவருக்காக காத்துக் கொண்டு உள்ளார். மேலும் ராதிகாவிடம் நீங்க இரண்டு பேரும் சேருவீங்க.. ஏதாவது சரி அதிசயம் நடக்கும் என்று தான் நினைத்ததாக சொல்ல, அதற்கு இனி சான்ஸ் இல்ல.. இனி இன்னொரு ரிலேஷன்ஷிப்பில் கூட நான் சிக்க மாட்டேன் என்று சொல்லுகின்றார்.
மேலும் இருவரும் தங்களுடைய வாழ்க்கையை பற்றி பேசி மகிழ்ந்ததோடு ராதிகா பாக்யாவிடம் தான் முடியை வெட்டப் போவதாக சொல்லுகின்றார். அதற்கு பாக்யா உங்களுக்கு ஷார்ட் கட் நல்லா இருக்கும் என்று சொல்லுகின்றார். இறுதியில் நீங்க நம்பரை மாற்றினீர்கள் என்றால் எனக்கு கட்டாயம் தாங்க என்று பாக்யா சொல்லி செல்லுகிறார்.
இதை அடுத்து ராதிகா தனியாக இருக்க, கோபி அவரிடம் சென்று கதைக்கலாமா என்று கேட்க, ராதிகாவும் ஆமாம் என்று சொல்லுகின்றார். இதன்போது நான் தினமும் உன்னை பற்றி தான் யோசிப்பேன்.. நான் நிறைய பிழை விட்டு விட்டேன்.. கடந்த காலத்துக்கு போக முடியும் என்றால் எல்லாவற்றையும் சரி செய்வேன் என்று சொல்ல, கடந்த காலத்துக்கு போவது என்றால் பிழைக்கு மேல் பிழை தான் செய்வீர்கள் என்று பதிலடி கொடுக்கின்றார் ராதிகா.
இறுதியில் உனக்கும் மையூகும் ஏதாவது செய்ய வேண்டும் என்ன என்றாலும் கேளு என்று சொல்ல, எனக்கு ஒரே ஒரு ஆசைதான் கடைசியா உங்கள் வீட்டை கூட்டிப் போக என்று ராதிகா கேட்கின்றார். அதற்கு கோபியும் சரியென சொல்லி காரில் ராதிகாவை ஏற்றுக் கொண்டு வீட்டுக்கு செல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!