• Feb 16 2025

உதடுகள் மூலம் காதலை வெளிப்படுத்திய விக்கி -நயன் ஜோடி..!

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகை நயன்தாரா பிரபல இசையமைப்பாளர் விக்கினேஷ் சிவனை "நானும் ரவுடி தான் " திரைப்படத்தின் பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் அழகான இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.


வாடகை தாயின் மூலம் குழந்தைகளினை பெற்றிருந்தாலும் அவர்களை மிகவும் அழகாக கவனித்து வருகின்றனர். தங்களது பிஸியான நேரத்திலும் குழந்தைகளை மிகவும் அழகாக கவனிக்கின்றனர். சமீபத்தில் விக்கினேஷ் சிவனின் அடுத்த படமான lik படத்தில் அனிருத் பாடிய "தீமா.." பாடல் செம வைரலாகியிருந்தது.


பிரதீப் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ஒரு பாடலினை விக்கி தனது வாழ்க்கையில் நடப்பதை வைத்து எழுதியுள்ளார்.இந்த பாடலினை தற்போது விக்கி -நயன் இருவரும் லிப் அசைத்து gloose up இல் எடுத்து கொண்ட வீடியோ ஒன்றினை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.


சின்ன சின்ன விடயங்களையும் மிகவும் அருமையாக பார்த்து பார்த்து செய்யும் விக்கி தனது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை தினம் தினம் அப்டேட் செய்து வருவார். அந்த வகையில் விக்கி இன்று காதலர் தின நினைவாக இந்த வீடியோவினை மிகவும் அழகாக பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement