சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட், முத்துவும் மீனாவும் பரணி வீட்டில் அவருடைய மகள் காதலித்தவரையே திருமணம் செய்து வைக்கும் படி அட்வைஸ் பண்ணுகிறார்கள். இறுதியில் அவர்களும் முத்து பேச்சைக் கேட்டு சம்மதம் தெரிவிக்கின்றார்கள்.
அதன் பின்பு மாப்பிள்ளை வீட்டுக்கு சென்ற முத்து மீனாவும் அவர்களிடமும் பவானி நல்ல பிள்ளை, உங்களுடைய வீட்டிற்கு நல்ல மருமகளாக இருப்பார், அதனால் அவரை ஏற்றுக் கொள்ளும்படி பக்குவமாக பேசுகின்றார்கள். இறுதியில் அவர்களும் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்கின்றார்கள்.
அந்த நேரத்தில் பிரவுன் மணி போன் பண்ணி தான் பெண்வீட்டில் பேசியதாகவும் அவர்களும் நல்லவர்களாக இருக்கின்றார்கள் அதனால் கல்யாணத்தை நடத்தி வைக்கும் படியும் சொல்லுகின்றார். அவரை இருந்து பார்த்துவிட்டு போகுமாறு மாப்பிள்ளை வீட்டார் சொல்ல, முத்து தனக்கு சவாரி இருக்கிறது இன்னொரு நாள் பார்க்கலாம் என்று சென்று விடுகிறார்கள்.
இதை தொடர்ந்து மனோஜ் கடைக்கு டேட்டு குத்தும் நபர் வருகின்றார். இதன் போது தான் டேட்டு குத்த போவதாக ரோகிணி சொல்ல, மனோஜ் முதலில் வேண்டாம் என்று மறுக்கின்றார். ஆனாலும் தான் செய்யப் போகிறேன் என்று மனோஜின் பெயரை பச்சை குத்திக் கொள்ளுகின்றார் ரோகினி. இதை பார்த்து மனோஜ் எமோஷனல் ஆகின்றார்.
இறுதியில் வீட்டுக்கு வந்த மனோஜ், ரோகினி செய்த காரியத்தை பாருங்கள் என அவருடைய கையை காட்டி சொல்லுகின்றார். இதை எல்லோரும் ஆச்சரியமாக பார்க்கின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!