தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான சமந்தா தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவினை 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். மண வாழ்க்கையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
இருப்பினும் சமந்தா தற்போது வரை தனியாகவே வாழ்ந்து வருகின்றார்.ஆனால் நாகசைத்தன்யா சோபிதா அவர்களை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டமையினால் அனைவராலும் வெறுக்கப்பட்டார்.குறிப்பாக சமந்தா ரசிகர்கள் மிகவும் கடுப்பில் இருந்தனர்.
இந்த நிலையில் நாகசைத்தன்யா தங்களது விவாகரத்து தொடர்பில் “நானும் சமந்தாவும் தனிப்பட்ட காரணங்களுக்காக விவாகரத்து செய்யும் முடிவை எடுத்தோம். இருவருமே ஒருவருக்கொருவரை மதிக்கிறோம். ஆனால் ஏன் என்னை குற்றவாளியை போல் பார்க்கிறீர்கள். ஒரு உறவை முறித்துக் கொள்வதற்கு முன் நான் 1000 முறை யோசிப்பேன். ஏனெனில் அதன் பின்விளைவுகளை பற்றி எனக்கு நன்றாக தெரியும். இது இருவரும் இணைந்து எடுத்த பரஸ்பர முடிவு!” என மிகவும் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
Listen News!