சமீபத்தில் மகா கும்பமேளா விழாவில் மாலை விற்று வைரலாகிய சாதாரண பெண் தான் மோனலிசா. இவர் பார்ப்பவர் கண்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு மிகவும் அழகாக காணப்படுவார். மோனாலிசாவின் அழகில் மயங்கி அதிகளவான மக்கள் இவரை பார்ப்பதற்காக கும்பமேளா சென்றுள்ளனர்.
அத்தகைய அழகை பார்த்து இயக்குநர் ஒருவர் மோனாலிசாவை வைத்து படம் ஒன்றினை எடுப்பதற்கு முடிவெடுத்துள்ளார். அந்தவகையில் " தி டைரி of மணிப்பூர் " படத்தை இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இயக்கவுள்ளார். அந்த படத்திற்கு தனக்கு இளம் நடிகை தான் வேண்டும் எனக் கூறிய இயக்குநர் மோனாலிசாவை வைத்து படம் எடுக்கவுள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அத்துடன் அந்தப் படத்தில் மோனலிசா ஓய்வு பெற்ற இராணுவ வீரரின் மகளாகவே நடிக்கப் போகின்றார். இதற்காக மோனலிசா தனது சொந்த இடமான மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு போகவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு படம் நடிக்கப் போவதால் அப்பா மற்றும் குடும்பத்தை ரொம்பவே மிஸ் பண்ணப் போவதாகவும் கூறியுள்ளார். ஏனெனில் இதுவே முதல் தடவை வீட்டை விட்டு வெளியே போவதாக கூறியுள்ளதுடன் இந்த இயக்குநர் மூலம் தனது கனவை நிறைவேற்றிக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
Listen News!