• Jan 19 2025

இந்தக் குப்பைத் தொட்டிக்கு எதுக்கு வந்தீங்க- பணம் சம்பாதிக்க இது தான் வழியா?- கமல்ஹாசனை வறுத்தெடுத்த பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.மேலும் கடந்த வாரம் போட்டியாளர் பிரதீப்பால் வீட்டில் பாதுகாப்பு இல்லை என பெண் போட்டியாளர்கள் சிலர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தனர்.

பிரதீப்பை கேட்காமல் அவரை பிக்பாஸ் வீட்டை விட்டு அனுப்பியிருக்கக் கூடாது என்று  கமல்ஹாசனை சோஷியல் மீடியாவில் படு கேவலமாக கழுவி ஊற்றினார்கள். இதுகுறித்து, சனிக்கிழமை எபிசோடில் பேசிய கமல், மாயா, பூர்ணிமா, ஜோவிகா மற்றும் ஐஷூவை பார்த்து, நீங்கள் பிரதீப் மீது வைத்த குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை தானா என்றார். 


மேலும், ரெட் கார்டு நான் கொடுக்கவில்லை. அதற்கான அதிகாரம் உங்களிடம் தான் இருந்தது. அதை நீங்கள் மறந்த இருப்பீர்கள் நான் ஞாபகப்படுத்துகிறேன் என்று அடுத்தடுத்து குறும்படத்தை வெளியிட்டார். மேலும், சிகப்பு மஞ்சளா தெரிந்தது என்றால், உங்களுக்கு என்ன மாலைக்கண்ணா, கொடுக்க மாட்டேன்னு சொல்லி இருக்கலாமே, அது உங்கள் உரிமை தானே, என சரமாரியாக கேள்வி கேட்டு போட்டியாளர்களை வறுத்தெடுத்தார். கமல்ஹாசனின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் நான்கு பெண்ணு திணறினார்கள்.

இதுகுறித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வலைப்பேச்சு அந்தணன், அதில், திருவாருர் தேர் திருவல்லிக்கேணி சந்துக்குள் வந்தால் என்ன ஆகுமோ அதுதான் கமல்ஹாசனின் நிலைமையாக இருக்கிறது, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் கமல் ஒரு மகா நடிகன், மிகப்பெரிய சாதனையாளர் என்பதை எல்லாத்தையும் மறந்துவிட்டு ரொம்ப சாதாரணமாக அவரிடம் நடந்து கொள்கிறார்கள். பிரதீப் வெளியே அனுப்பப்பட்டது குறித்து கமல் பல விளக்கம் கொடுத்த போதும், இணையவாசிகளுக்கு அவர் மீதான கோவம் போகவில்லை. 

மோசமாக நடந்து கொண்ட மாயாவை வெளியேற்றாமல் கமல் சமாளிப்பதற்கு காரணம், மாயா விக்ரம் படத்தில் நடித்தவர் என்றும், அவருக்கும் கமலுக்கும் ஒரு நெருக்கம் இருக்கு என்றும் இணையவாசிகள் வதந்தியை பரப்பி வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது, இவ்வளவு பெரிய சாதனையாளர் நீங்க எதுக்கு இந்த குப்பை தொட்டிக்கு வந்தீங்க, உங்களுடைய மரியாதையை நீங்க காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பணம் தான் முக்கியம் என்றால், அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், உங்களுடைய மரியாதையை நீங்கள் ஏன் இழக்கிறீர்கள் என்று ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார் ன்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement