• May 14 2026

350 கோடி சாம்ராஜ்யத்தை ஆளும் சூர்யா. !மும்பை வீடு முதல் லக்சரி கார்கள் வரை..சொத்து விவரம்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் இன்று மாலை  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், சூர்யாவின் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.

சமீப காலங்களில் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையிலும், சூர்யாவின் மார்க்கெட் மதிப்பு இன்னும் குறையாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

சரவணன் சிவகுமார் என்ற இயற்பெயருடைய சூர்யா, 1990களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவர் ‘நேருக்கு நேர்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ‘பேரழகன்’, ‘வேல்’, ‘ஃப்ரெண்ட்ஸ்’, ‘சிங்கம்’ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்கள் மூலம் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார்.


இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு 350 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் மும்பையில் உள்ள ஆடம்பர வீடுகள், விலையுயர்ந்த கார்கள் உள்ளிட்ட பல சொத்துக்கள் அவரிடம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’ போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தையும் சூர்யா நடத்தி வருகிறார்.

சூர்யா மற்றும் ஜோதிகா தமிழ் சினிமாவின் பிரபல தம்பதிகளில் ஒருவராக பார்க்கப்படுகின்றனர்.  இருவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 537 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


2006ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட இந்த தம்பதி, தற்போது தங்களது குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகின்றனர். அங்கு சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்றை அவர்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தி சினிமாவில் ‘டோலி சஜா கே ரக்னா’ திரைப்படம் மூலம் அறிமுகமான ஜோதிகாவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் சுமார் 331 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக சூர்யாவின் சம்பளத்தில் பெரிய மாற்றம் இல்லையெனவும், ஒரு படத்திற்கு 20 முதல் 25 கோடி ரூபாய் வரை அவர் சம்பளம் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ‘கருப்பு’ திரைப்படம் டிரெய்லர், பாடல்கள் மற்றும் விளம்பரங்களின் மூலம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. முதல் இரண்டு நாட்களுக்கு காலை 9 மணி சிறப்பு காட்சிகளுக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியது.

ஆனால், திடீரென கருப்பு படத்தின் காலை நேர காட்சி ரத்து செய்யப்பட்டதால் சில திரையரங்குகள் முன்பதிவுகளை நிறுத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. எனினும் இன்று மாலை கருப்பு படம் ரிலீஸாகும் என நம்பப்படுகிறது.

Advertisement

Advertisement