• May 14 2026

திருமண வாக்குறுதி கொடுத்தது திரிஷா அல்ல.! ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

விஜய் மற்றும் திரிஷா பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளனர். சமீப காலங்களில் அவர்கள் ஒன்றாக பொதுவெளியில் தோன்றிய நிகழ்வுகளும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில், முதலில் கோவிலுக்கு சென்ற திரிஷா, பின்னர் விஜயின் வீட்டிற்கு சென்று அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

மேலும், நடிகை லக்ஷ்மி மஞ்சு தனது பிறந்தநாள் வாழ்த்தில், “விஜயின் அரசியல் வெற்றிதான் திரிஷாவுக்கு கிடைத்த சிறந்த பிறந்தநாள் பரிசு” என குறிப்பிட்டிருந்தார். அதேபோல் நடிகை சார்மி கௌர், திரிஷாவை “லக்கி மாஸ்காட்” என அழைத்ததும் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

அந்த விழாவில் விஜயின் மனைவி மற்றும் குழந்தைகள் கலந்து கொள்ளாத நிலையில், திரிஷாவின் வருகை பலரது கவனத்தையும் ஈர்த்தது.  


இதனைத் தொடர்ந்து, விஜயின் பதவியேற்பு விழாவில் திரிஷா கலந்து கொண்டு அவரது குடும்பத்தினருடன் உரையாடிய காட்சிகள் வெளியாகியதும், சமூக வலைத்தளங்களில் மீண்டும் ட்ரோல்கள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், நடிகை திரிஷா குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வரும் விமர்சனங்களுக்கு எதிராக பிரபல மூத்த நடிகை குனிக்கா சதானந்த் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். 

விஜயுடன் திரிஷாவுக்கு இருக்கும் நெருக்கம் குறித்து அவதூறாக பேசிய நெட்டிசனுக்கு அவர் கடுமையாக பதிலடி கொடுத்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

அதன்படி எக்ஸ் தளத்தில் ஒருவர் பகிர்ந்த பதிவில், விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சியை பார்த்தபோது திரிஷா உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்ட வீடியோவும், அவர் முன்பு பகிர்ந்த பதிவு ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

அதனுடன், “விஜயின் கஷ்ட காலங்களில் திரிஷா இல்லை, அவரது குடும்பத்தை உருவாக்கவும் குழந்தைகளை வளர்க்கவும் அவர் உதவவில்லை. ஆனால் இன்று குடும்பம் உருவாக்கிய புகழையும் வெற்றியையும் அனுபவிக்க வந்திருக்கிறார்” என அந்த நபர் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை பார்த்து ஆவேசமடைந்த குனிக்கா சதானந்த், “மீண்டும் ஒரு பெண்ணை மட்டுமே குறிவைத்து கேள்வி கேட்கிறீர்கள். திருமண வாக்குறுதி கொடுத்தது அவர் அல்ல. ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய எதிரி இன்னொரு பெண்ணே என்று மக்கள் சொல்வது உண்மை என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்” என பதிலளித்துள்ளார்.

Advertisement

Advertisement