• May 14 2026

இந்த வார ஓடிடி விருந்து.. வீட்டிலிருந்தே பார்க்க ரெடி ஆன சூப்பர் ஹிட் படங்கள்.!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இணையாக, தற்போது ஓடிடி தளங்களிலும் புதிய படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. 

வாரம் தோறும் பல மொழிகளில் வெளியாகும் புதிய உள்ளடக்கங்கள் காரணமாக, வீட்டிலிருந்தபடியே ரசிகர்கள் திரை அனுபவத்தை ரசித்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்த வாரம் பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

“துரந்தர் தி ரிவெஞ்ச்”

பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ள “துரந்தர் தி ரிவெஞ்ச்” திரைப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.


இந்திய உளவாளியின் ரகசிய நடவடிக்கைகளை மையமாக கொண்டு உருவான இந்த படம், அதிரடி மற்றும் சஸ்பென்ஸ் கலந்த திரைக்கதையால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

“காளிதாஸ் 2”

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத், பவானி ஸ்ரீ, அபர்ணதி நடித்துள்ள கிரைம் திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”.


போலீஸ் அதிகாரியாக பரத் நடித்துள்ள இந்த படம், முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படம் தற்போது பிரைம் வீடியோ, சன் நெக்ஸ்ட் மற்றும் சிம்பிலி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

 “கப்”

மலையாளத்தில் உருவான ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “கப்”, மாவட்ட அளவிலான கோப்பையை வெல்ல போராடும் இளைஞனின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.


மேத்யூ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் நாளை மனோரமா மேக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

“மிஸ்டர் எக்ஸ்”

ஆர்யா, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ள “மிஸ்டர் எக்ஸ்” திரைப்படம், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.


“எப்ஐஆர்” பட இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியுள்ள இந்த படம், ஆக்ஷன் மற்றும் மர்மம் கலந்த கதையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 “ஒரு துரோக சாஹச்சர்யத்தில்”

மலையாள மொழியில் உருவான மர்ம நகைச்சுவை திரில்லர் தொடரான “ஒரு துரோக சாஹச்சர்யத்தில்” தொடரின் இரண்டாவது சீசன், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நாளை ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

குஞ்சாக்கோ போபன், திலீஷ் போத்தன், சஜின் கோபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

“எக்ஸாம்”

இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் துஷாரா விஜயன் நடித்துள்ள வெப் தொடர் “எக்ஸாம்”, பரபரப்பான திருப்பங்களுடன் உருவாகியுள்ளது.

அதிதி பாலன், அப்பாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த தொடர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நாளை அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

திரையரங்குகளுக்கு செல்ல முடியாத ரசிகர்களுக்கு, இந்த வார ஓடிடி ரிலீஸ்கள் சிறந்த பொழுதுபோக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement