• May 14 2026

'இது நடந்திருக்க கூடாது’ கண்ணீர் மல்க பேசிய RJ பாலாஜி.! மனுஷன் உடைச்சே போய்ட்டாரே...!

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டில் திடீர் சிக்கல் ஏற்பட்டதால், இன்று காலை திரையிடவிருந்த சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யாவுடன் திரிஷா, ஆர்.ஜே. பாலாஜி, யோகி பாபு, நட்டி, சுவாசிகா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபியங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த இப்படத்திற்கு, இன்று மற்றும் நாளை காலை 9 மணி சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.

ஜஸ்வந்த் பண்டேரி என்பவருக்கு தயாரிப்பு நிறுவனம் வழங்க வேண்டிய தொகை தொடர்பான பிரச்சனை காரணமாக, பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இதன் காரணமாக இன்று வெளியாக வேண்டிய ‘கருப்பு’ திரைப்படம் இன்று மாலை வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் காலை 9 மணி காட்சி ரத்து செய்யப்பட்டதை எண்ணிமன வேதனையில் கண்கலங்கி அழுதுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.  இது தொடர்பில் அவர் வெளியிட்ட வீடியோவில் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், “ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது நடந்திருக்க கூடாது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என எங்கு நீங்கள் காலை 9 மணிக்காக தியேட்டருக்கு சென்றிருந்தாலும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

படம் பார்ப்பதே வாழ்க்கையில் உள்ள கவலைகளை மறக்கத்தான். ஆனால் அந்த அனுபவமே சவாலாக மாறிவிட்டதற்கு வருந்துகிறேன். நானும் இதை எதிர்பார்க்கவில்லை. மே 14ஆம் தேதி ‘கருப்பு’ வெளியாகி பெரிய வெற்றி பெறும் என பலமுறை நினைத்திருக்கிறேன்.

படம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என நம்புகிறேன். கடவுள் இந்தப் படத்தின் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வார். அனைவரும் படம் வெளியாவதற்காக வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். 

பல தடைகளை கடந்து தான் படம் வெளியாகிறது. சூர்யா சார் இந்தப் படத்திற்காக நிறைய கொடுத்துவிட்டார். இந்த படம் கண்டிப்பாக வெளியாகும். படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement