• Dec 18 2025

விஜய்யின் ‘ஜனநாயகன்’ சாட்டிலைட் உரிமம் யாருக்கு தெரியுமா?… போட்டி போட்டு வாங்கிய சேனல்.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அரசியல் படம், 2025 ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளதை முன்னிட்டு, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக வியாபார உலகமும் பெரிதும் கவனித்து வருகிறது.


இதற்கிடையில், படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமங்கள் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி ஹாலிவுட் வட்டாரத்தில் பெரிய பேச்சாக மாறியுள்ளது.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. விஜய் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெச்.வினோத் – விஜய் கூட்டணி என்றதும் ரசிகர்களிடையே உயர்ந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அவரது கதைக்களம், திரைக்கதை மற்றும் விஜயின் அரசியல் பேச்சுகளை நினைவூட்டும் கேரக்டர்கள் காரணமாக, படம் ஒரு அரசியல் ப்ளாக்பஸ்டர் ஆக இருக்கும் என பலரும் கருதுகின்றனர்.


திரையுலக வட்டார தகவல்படி, ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் 121 கோடி தொகையில் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த உரிமம் பெறுவதற்கான போட்டியில் நெட்ஃப்ளிக்ஸும் இறங்கியிருந்ததால், விலை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

இதனுடன், படத்தின் சாட்டிலைட் உரிமத்தையும் ஜீ தமிழ் சுமார் 40 கோடி அளவில் வாங்கியிருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலும், மொத்தம் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் பெற்றிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement