திரையுலகில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் பெற்ற நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், எப்போதும் தன்னுடைய எளிமையான குணம், மனிதநேயம் மற்றும் நற்செயல்களால் பிரபலமானவர். ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல், அவருடன் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லாரிடமும் அவருக்கு இருக்கும் அன்பு என்றும் பாராட்டப்படுகிறது.

சமீபத்தில், நடிகர் விதார்த் தனது கரியரில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அது, அஜித் அவர்களின் மனிதநேயம் எந்த அளவு உயர்ந்தது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.
வீரம் படத்தில் தம்பியாக நடித்த விதார்த், உண்மையிலேயே அஜித்தின் அன்பையும் ஆதரவையும் ‘நிஜ தம்பி’ போலவே அனுபவித்ததாக தெரிவித்துள்ளார்.விதார்த் கூறிய அந்த சம்பவம் ரசிகர்களிடையே எமோஷனலான ரியாக்ஷன்களை ஏற்படுத்தியிருந்தது.

அதாவது,“வீரம் படத்தில நான் தம்பி மாதிரி நடிச்சேன். ஆனா, அஜித் நிஜத்துலயும் என்னை தம்பி மாதிரி தான் பார்த்துக்கிட்டார்.
ஒரு முறை Song ஷூட்டிங்கிற்காக ஸ்விட்சர்லாந்த் போனாங்க. அப்போ அஜித் என்கிட்ட ‘ஸ்விட்சர்லாந்து பாத்திருக்கீங்களா?’ என்று கேட்டார். நான் இல்ல சார்ன்னு சொன்னேன். உடனே சரி வாங்க போலாம்னு சொன்னார். இரண்டே நாள்ல எனக்கு விசா ரெடி பண்ணி, என்ன ஸ்விட்சர்லாந்து கூட்டிட்டுப் போனார்!” என்று கூறியிருந்தார் விதார்த்.
Listen News!