தமிழ் சினிமாவில் இயல்பான அழகு, புன்னகை இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் கொண்டவர்களில் முக்கியமானவர் நடிகை சினேகா. 2000-களில் ரசிகர்களின் இதயத்தை மளமளவென கவர்ந்தவர் தான் 'புன்னகை அரசி' சினேகா.

காலம் கடந்து பல புதிய நடிகைகள் வந்தாலும், சினேகாவின் கவர்ச்சி, நடிப்பு, அவருடைய தனிப்பட்ட நற்செயல்கள் ஆகியவை இவரை ரசிகர்களிடையே இன்னும் பிரபலமாக வைத்திருக்கின்றன.
திரையுலகில் பல சிறந்த கதாபாத்திரங்களை உருவாக்கிய இவர், தற்போது தனது வியாபார முயற்சிகளிலும் வெற்றி கண்டுள்ளார்.

திரையுலகில் நடிப்பைக் குறைத்த பிறகு, சினேகா புடவை வடிவமைப்பு மற்றும் வணிகத் துறையில் கால் பதித்தார். சென்னையில் “Snehalayaa” என்ற பெயரில் புடவை கடை ஒன்றை தொடங்கி, பெண்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றார்.
சில மாதங்களுக்கு முன்பு, ரசிகர்களும் வாடிக்கையாளர்களும் எதிர்பார்த்த படி, கோயம்புத்தூரில் Snehalayaa-வின் இரண்டாவது பிராஞ்சையும் திறந்து வைத்தார்.

படத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதும் எளிமையையும், குடும்பத்தையும் முதன்மைப்படுத்தும் சினேகா, சமீபத்தில் தனது கணவர் பிரசன்னா மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான family trip சென்றுள்ளார்.
அந்த பயணத்தின் புகைப்படங்களை சினேகா தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததும், அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி விட்டது.
Listen News!