• Nov 22 2025

இந்த வார டார்கெட் இவங்கதான்.? தட்டித் தூக்க தயாரான சக போட்டியாளர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது எட்டாவது சீசனில் கால் பதித்துள்ளது. இதனை உலக நாயகனுக்கு அடுத்தபடியாக விஜய் சேதுபதி மிகச்சிறப்பாக தொகுத்து வழங்கி வருகின்றார். இம்முறை 18 போட்டியாளர்களுடன் ஒரே வீட்டை இரண்டாகப் பிரித்து ஆண்கள், பெண்கள் அணியென விளையாடி வருகின்றார்கள்.

இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

எனினும் பிக் பாஸ் ஆரம்பத்திலேயே வைக்கப்பட்ட 24 மணி நேர எலிழுமினேஷனில் சிக்கிய சச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும் அவர் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் காணப்படுவதாக சமூக வலைதள பக்கங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


இந்த நிலையில், இன்றைய தினம் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரவீந்தர் - ரஞ்சித் பயங்கரமாகவே சண்டை போட்டார்கள். ஆனால் அது கடைசியில் பிராங்க் என்று முடிந்ததால் பெண்கள் அணியினர் ரொம்பவே கடுப்பாக்கினார்கள். இதனால் பவித்ரா புலம்பி அழுது கொண்டிருந்தார். அதேபோல முத்துக்குமார் - ஜாக்குலின் இடையே வாக்குவாதம் நடந்தது. 

தற்போது வெளியான ப்ரோமோவில் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் யார் இந்த வாரம் வெளியே போவார்கள் என்று பிக் பாஸ் டாஸ்க் வைத்துள்ளார். ஒவ்வொரு போட்டியாளர்களுமே நாமினேட் ஆனவர்களின் பெயரை சொல்லி இருந்தார்கள். அதில் அதிகமாக ரஞ்சித், சௌந்தர்யா, ரவீந்தரரின் பெயர் அடிபட்டுள்ளது. எனவே இவர்களில் ஒருவர் வெளியே போவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement