• Jan 19 2025

அட்டகத்தி தினேஷுக்கு வில்லனாகும் ஆர்யா? பா. ரஞ்சித்தின் அடுத்த படைப்பு ரெடி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை இயக்கியதில் இயக்குனர் பா. ரஞ்சித்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஆதிக்க சமூகத்தை சேர்ந்த நாயகர்கள் அவர்களின் உயர்ந்த குணங்கள் என நாயக பிம்பத்தை உருவாக்கி வந்த பல வருட சினிமா வரலாற்றிலேயே, விளிம்புநிலை சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் கதைகளை பேசியவர் பா. ரஞ்சித்.

இவர் அட்டகத்தி, காலா, கபாலி, மெட்ராஸ், சார்பட்டா, தங்கலான்  என தனது அரசியலை பல்வேறு விதங்களில் கதைக்களங்கள் மூலமாக பேசி வருகின்றார். தற்போது பா. ரஞ்சித் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தில் விக்ரம் நாயகனாக நடித்திருந்தார். தங்கலான் திரைப்படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விக்ரமின் கடின உழைப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.


தங்கலான் படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித்  வேட்டுவம் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்க,  இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளாராம். மேலும் அசோக் செல்வமும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

கேங்ஸ்டர் டிராமாவாக இப்படம் உருவாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியான நிலையில், கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement