• Jan 19 2025

ஃபேன் மீட்டிங் வச்சிட்டா போதுமா? இந்த 6 நடிகர்களும் விஜய் பக்கத்துல கூட வர முடியாது.. திருப்பூர் சுப்பிரமணியம்

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தற்போதுகோட்என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக அவர்தளபதி 69’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் அதுதான் அவரது கடைசி படம் என்றும் அதன் பிறகு அவர் முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார் என்றும் கூறப்பட்டது.

இதனை அடுத்து தமிழ் சினிமாவில் விஜய்யின் இடம் காலியாவதால் அடுத்த விஜய் யார்? அடுத்த தளபதி யார்? என்ற பேச்சு நடமாடி வருகிறது என்பதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரைச் சொல்லி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக சிவகார்த்திகேயன் அடுத்த தளபதி என்ற பட்டத்தை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரும் ரசிகர்களை கூட்டி மீட்டிங் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் மட்டுமின்றி சூர்யா, தனுஷ், சிம்பு, விக்ரம்,கார்த்தி உள்ளிட்டவர்களும் ரசிகர்களை அடிக்கடி சந்தித்து வருவதாகவும் அடுத்த தளபதி இடத்தை பிடிக்க வேண்டும் என்று தீவிர முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில்விஜய்யின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்று கூறியுள்ளார். என்னை பொருத்தவரை  சூர்யா, தனுஷ், சிம்பு, விக்ரம்,கார்த்தி சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் இன்னும் ஒரே இடத்தில் தான் இருக்கிறார்கள் என்றும் அஜித், விஜய், ரஜினி, கமல் இடத்தை அவர்களால் பிடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஒருவேளை இனிவரும் காலங்களில் நல்ல படங்களை கொடுத்தால் அவர்கள் விஜய் இடத்திற்கு வருவதற்கு முயற்சி செய்யலாம் என்றும் இப்போதைக்கு அவர்கள் விஜய் இடத்தை பிடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement