• Apr 03 2025

என்ன பழனிச்சாமி மேல லவ்வா? கண்டபடி பேசிய கோபி! பாக்கியா சொன்ன ஒரு சொல்லால் ஆடிப்போன கோபி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதில், கோபியை வேலைக்கு போகலையா என்று ராதிகா விசாரிக்க, இல்ல, மீட்டிங் இருக்கு என்று சொல்லி சமாளிக்கிறார்.மேலும் நான் போவேன் பேபி என்று சொல்ல, அப்போ ஒன்னா போகலாம் வாங்க என சொல்லவும் இல்லை என சமாளித்து நழுவுகிறார் கோபி.

மறுபக்கம் அமிர்தா ரொம்பவும் எமோஷனலாக எழிலிடம் கதைக்கிறார். இருவரும் ஐ லவ் யூ சொல்லி கட்டிப்பிடித்து அழுகிறார்.

மறுபக்கம், தனது நண்பரை சந்திக்க செல்கிறார் கோபி, அங்கு நடந்தவற்றையும் ராதிகாவை சமாளிக்க முடியல என்றும் ஹோட்டலில் இருந்து பேசிக் கொண்டு இருக்க, அங்கு பழனிச்சாமியும் பாக்கியாவும் வருகிறார்கள்.


கோபிக்கு எதிர் பக்கம் இருந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அதனை கோபியின் நண்பர் பார்த்து கோபியிடம் சொல்ல, அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் கோபி. 

அதை பார்த்து கோவத்தில் இருந்த கோபி, பழனிச் சாமி அங்கிருந்து வெளியேறியதும் பாக்கியாவை வந்து திட்டுகிறார்.

மேலும், என்ன அவன் மேல லவ்வா, இதனால தான் ஊர்ல இருக்கிற லவ் எல்லாம் சேர்த்து வச்சியா என கண்டபடி திட்டுகிறார்.

அதற்கு பதிலடி கொடுத்த பாக்கியா, எனக்கு கல்யாணம் பண்ணனும் என்று நினைச்சா என் பிள்ளைகள் கிட்ட சொல்லி அவங்க சம்மதத்துடன் தான் பண்ணுவன், உங்களை போல திருட்டுத்தனம் செய்ய மாட்டேன் என சொல்லி செல்கிறார்.

Advertisement

Advertisement