• Jan 19 2025

அட கண்றாவியே.. குழந்தையை வச்சுக்கிட்டு இப்படியா போஸ் கொடுப்பாங்க.. ஸ்ரேயாவுக்கு குவியும் கண்டனம்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கிளாமரான காஸ்டியூம் அணிந்து குழந்தையை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் குழந்தை கையில் வைத்துக் கொண்டு இப்படிப்பட்ட ஆடையா அணிய வேண்டும்? என நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா என்பதும், ரஜினியுடன் ’சிவாஜி’ விஜய்யுடன் ’அழகிய தமிழ் மகன்’ விக்ரமுடன் ’கந்தசாமி’ தனுசுடன் ’திருவிளையாடல் ஆரம்பம்’ என முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. 

நடிகை ஸ்ரேயா கடந்த 2015 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவ்வப்போது அவர் தனது குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. 



இந்த நிலையில் சமீபத்தில் ஸ்ரேயா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் அவருடைய குழந்தை க்யூட்டாக இருந்தாலும் ஸ்ரேயா சரணின் காஸ்ட்யூம் முகம் சுளிக்க வைப்பதாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



ஒரு தாய் தன் மகளுடன் இருக்கும் போது அணியும் ஆடையா இது? என்று நெட்டிசன்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சிலர் இந்த புகைப்படங்களுக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement