• Feb 14 2026

சேலம் த.வெ.க. கூட்டத்தில் சோகம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.! நடந்தது என்ன.?

subiththira / 11 hours ago

Advertisement

Listen News!

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் திடீர் சோகத்தில் முடிந்துள்ளது. சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக சூரஜ் என்பவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் கட்சியினரிடமும் ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று மிகுந்த ஆர்வத்துடன் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டிருந்தனர். 

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென கூட்டத்தில் நெரிசல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. அப்போது சூரஜ் என்பவர் உடல்நலக்குறைவால் கீழே விழுந்ததாக தெரிவித்துள்ளனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அவரை உடனடியாக அங்கு இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement