• Apr 15 2026

ராம் சரண்- உபாசனா குழந்தைகளின் பெயர் இதுதானா.? வெளியான அதகள அப்டேட்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ராம் சரண். மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களின் மகனாக சினிமாவில் அறிமுகமானாலும், இன்று தனித்துவமான நடிப்பு, ஆற்றல் மிக்க நடனத் திறன் மற்றும் பான்-இந்தியா புகழால் தனக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி ரசிகர்களிடமும் அவர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். அவரது படங்கள் வெளியாகும் போது தமிழகத்திலும் சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.


அத்தகைய, நடிகர் ராம் சரண், உபாசனா அவர்களை காதலித்து 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய நிகழ்வாக அமைந்தது.

இவர்களுக்கு பின்னர் க்ளின் காரா என்ற மகள் பிறந்தார். இந்நிலையில், இந்த தம்பதியினருக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த செய்தி வெளியான உடனே ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை குவித்தனர்.

தற்பொழுது, இரட்டைக் குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சிரஞ்சீவி தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். அந்தவகையில், மகளுக்கு அன்வீரா தேவி, மகனுக்கு சிவராம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இத்தகவல் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement