• Aug 09 2026

நீங்க அழாதீங்க மீனா ஒன்னும் நடக்காது.! விஜயாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஆங்கில  வகுப்பிற்கு வந்த மீனாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்படுகின்றது. இதையடுத்து ஸ்வேதா உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றார்.

அங்கு சீதாவும் முத்துவும் பதற்றத்துடன் வந்து விடுகின்றனர். அதன்பின்பு சீதா மீனாவை டாக்டரிடம் அழைத்துச் செல்ல, அவர் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறுகின்றார். 

அதாவது, அவருடைய கர்ப்பப்பையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறுகின்றார்.

இதைக் கேட்டு மீனா அழுது புலம்புகின்றார். ஆனாலும் முத்து அவருக்கு தைரியம் கொடுக்கிறார். மேலும், குறித்த டாக்டர் அவரை தேற்றி, இதற்கு சரியான முறையில் சிகிச்சை எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கை கொடுத்து அனுப்புகின்றார்.


அவர்கள் வெளியே வரும்போது விஜயா அவர்களைப் பார்த்து விடுகின்றார். மேலும், தாய் மருத்துவமனையில் மீனாவுக்கு என்ன வேலை என்று சந்தேகிக்கின்றார். இதன்போது நேரடியாக சீதாவிடம் சென்று விசாரிக்க, அவர் அக்காவுக்கு வயிற்று வலி மட்டும்தான் என்று சொல்லி அனுப்புகின்றார்.

இன்னொரு பக்கம், மனோஜ் தனக்கு பணம் கிடைக்கவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கனகாவின் அம்மாவும் வருகின்றார். பணம் கொடுத்தால் தான் வீட்டிற்கு வருவேன் என்று மனோஜ் பிடிவாதமாக இருக்க, வேறு வழியில்லாமல் நாளைக்கு வந்து பணத்தை எடுத்துச் சொல்லுங்கள் என்று கூறிச் செல்கின்றார் கனகாவின் அம்மா. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement