• Aug 09 2026

முத்துமீனாவை சுக்கு நூறாக உடைத்த விஜயா.. கனகாவின் அம்மா மனோஜ்க்கு போட்ட கண்டிஷன்?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், வீட்டுக்கு வந்த விஜயா, முத்து மற்றும் மீனாவை மருத்துவமனையில் பார்த்ததாகவும், அங்கு அவர்களுக்கு என்ன வேலை என்றும் அண்ணாமலையிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த, முத்து மற்றும் மீனாவிடம் என்ன நடந்தது, உண்மையை சொல்லுங்கள் என்று விஜயா கடுமையாகக் கேட்கிறார். ஆனால், மீனா தனக்கு வயிற்று வலி வந்ததால் தான் மருத்துவமனைக்கு சென்றதாக கூறுகிறார்.

ஆனாலும், விஜயா, "இந்த வீட்டில் மனோஜின் வாரிசுதான் முதலில் வர வேண்டும். நீங்கள் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது" என்று நிபந்தனை விதிக்கிறார். இதனால் மீனா அழுதுகொண்டே உள்ளே சென்று விடுகிறார்.

இன்னொரு பக்கம், கனகாவின் அம்மா மனோஜை அழைத்து 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறார். ஆனால், அந்தப் பணத்தை எடுக்க முன்பு கனகாவிற்கு சாந்தி முகூர்த்தம் நடத்த வேண்டும் என்றும், அதற்கான ஒரு தேதியை கூறிவிட்டு பணத்தை எடுத்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கிறார்.

அதன்படி, ஒரு தேதியைக் குறித்து வைத்து மனோஜ் பணத்தை எடுத்துச் செல்கிறார். வீட்டுக்கு வந்ததும், "கூடிய சீக்கிரமே ரோகிணியிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிடலாம்" என்று விஜயாவிடம் பணத்தைக் காட்டி பேசுகிறார். 

ஆனால், வீட்டில் உள்ள மற்றவர்கள் இந்தப் பணம் எப்படி வந்தது என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement