• Aug 05 2026

இது தான் கர்மா.. ரோகிணியை குத்திக்காட்டிய வித்யா.. மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், ரோகிணி வீட்டுக்கு வித்யா வருகிறார். அவரிடம் ரோகிணியின் அம்மா, ரோகிணி டுபாய் போகப் போவதாக சொல்லி கவலைப்படுகிறார்.

ஆனாலும், வித்யா ரோகிணி வந்தவுடன், "இது தான் கர்மா... நீ சொன்ன பொய் இன்று நிஜமாகப் போகிறது" எனக் கூறுகிறார். மேலும், "மனோஜை உன்னால் மறக்க முடியுமா?" என்று கேட்க, "அது மட்டும் என்னால் முடியாது" என வித்யாவின் தோளில் சாய்ந்து அழுகிறார்.

இதைத் தொடர்ந்து, மீனாவின் சங்கத்திற்கு வெளிநாட்டவர் ஒருவர் வருகிறார். முதலில் அவரை சிந்தாமணி வைத்து பேச, அவருடன் ஆங்கிலத்தில் கதைக்க முடியாமல் சிந்தாமணி திணறுகிறார். இதனால் அவர் அங்கிருந்து கிளம்புகிறார்.


எனினும், மீனா அவரை அழைத்து ஆங்கிலத்தில் பேச, எல்லாரும் வியந்து பார்க்கின்றனர். சிந்தாமணி வயிறு எரிகிறார். ஆனாலும், அந்த வெளிநாட்டவர் மீனாவைப் பாராட்டி, அவருக்கே அந்த ஆர்டரை வழங்குவதற்கு ஒத்துக் கொள்கிறார்.

இதைத் தொடர்ந்து, வீட்டுக்கு வந்த மீனா இந்த சந்தோஷத்தை முத்துவிடம் சொல்லுகிறார். மேலும், "நாங்கள் சீக்கிரமாகவே மேலே ரூம் கட்டிவிடலாம்" என்று நம்பிக்கை கொடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement