• Aug 15 2026

‘வலிமை’ தோல்வி கற்றுத்தந்த பாடம்... மனம் திறந்த எச்.வினோத்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் குறித்து இயக்குநர் எச்.வினோத் தனது மனம் திறந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.

‘சதுரங்க வேட்டை’ மூலம் இயக்குநராக அறிமுகமான எச்.வினோத், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ ஆகிய படங்களை இயக்கினார்.

‘வலிமை’ திரைப்படம் தான் தனது திரைப்பயணத்தில் அதிக விமர்சனங்களை சந்தித்த படம் என தெரிவித்த அவர், அந்த அனுபவம் பல முக்கியமான பாடங்களை கற்றுக் கொடுத்ததாக கூறினார்.

‘வலிமை’ உருவாக்கத்தின் போது அஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படத்தை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டதாகவும், குடும்ப ரசிகர்களையும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் படத்தை உருவாக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், ‘விசுவாசம்’ போன்ற ஒரு திரைப்படத்தை தன்னால் உருவாக்க முடியாது என்பது தனக்குத் தெரியும் என்றும், அந்த வகையான கதை சொல்லும் பாணி தனது இயல்பான படைப்பாற்றலுக்கு பொருந்தாது என்றும் எச்.வினோத் கூறியுள்ளார்.

அவரது இந்த வெளிப்படையான கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன

Advertisement

Advertisement