• Aug 09 2026

தேசிய விருதில் ‘மகாராஜா’ மிரட்டல்... தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இரட்டை பெருமை!

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் கலைஞர்களின் சிறந்த பங்களிப்புகளை கௌரவிக்கும் உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருதுகள், கடந்த 1954ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை மட்டுமின்றி இயக்கம், ஒளிப்பதிவு, இசை, சண்டைப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், 72-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் பெற்ற படங்கள் இந்த விருதுகளுக்காக பரிசீலிக்கப்பட்டன.

இந்த முறை தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் வகையில், கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘மகாராஜா’ திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை கைப்பற்றியுள்ளது.

படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சச்சனா நமிதாஸ், சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார். அதேபோல், இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு உயிரூட்டிய அனல் அரசு, சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான விருதை பெற்றுள்ளார்.


‘குரங்கு பொம்மை’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய ‘மகாராஜா’, கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் திகதி வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பாராட்டுகளை பெற்றது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான சமூக விழிப்புணர்வை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், தற்போது தேசிய விருதுகளின் மூலம் மேலும் ஒரு முக்கியமான அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

‘மகாராஜா’ படத்தின் இந்த இரட்டை வெற்றி, தமிழ் சினிமாவின் தரத்தையும், கலைஞர்களின் திறமையையும் மீண்டும் ஒருமுறை தேசிய அளவில் வெளிப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement