• Aug 05 2026

‘ஜெயிலர் 2’ இசை விழாவுக்கு மலேசியா தேர்வா? வைரலாகும் புதிய தகவல்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி . இந்த இசை வெளியீட்டு விழாவை இந்தியாவில் அல்லாமல் மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மலேசியாவில் ரஜினிகாந்திற்கு அதிகளவிலான ரசிகர் பட்டாளம் இருப்பதாலும், சர்வதேச அளவில் படத்திற்கு கூடுதல் வரவேற்பை உருவாக்கும் நோக்கிலும் இந்த திட்டம் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


எனினும், இந்த நிகழ்வுக்கு ரஜினிகாந்தின் இறுதி ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை என்றும், அவரது பயண அட்டவணை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

'ஜெயிலர் 2' திரைப்படம் இன்னும் தயாரிப்பு கட்டத்தில் இருப்பதால், இசை வெளியீட்டு விழா தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு உடனடியாக வெளியாக வாய்ப்பில்லை என்றும், அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த பிறகே தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிடும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் இதுவரை ‘ஜெயிலர் 2’ இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறும் என்பது தொடர்பாக படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது வெளியாகியுள்ளவை சினிமா வட்டாரத் தகவல்கள் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement