சினிமா உலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள “சிறை” திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. அதன் வெற்றி அலை இன்னும் சூடாகத் தொடருகிறது. நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அக்ஷய் குமார் இவர்களின் நடிப்பைப் புகழ்ந்து நடிகர்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் தனித்தனியாக ஆதரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் அக்ஷய் குமார் தற்பொழுது "ராவடி" என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அப்படத்தின் படப்பிடிப்பின் போது “சிறை” திரைப்படத்தின் 50ம் நாள் வெற்றியை , அங்கேயே கொண்டாடிய புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
“சிறை” திரைப்படம் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களின் இயக்கத்தில் உருவாகிய ஒரு பிரம்மாண்டமான படமாகும். இந்த படம் வெளியாகி சில நாட்களிலேயே , ரசிகர்கள் இதனை மனமாரமாக வரவேற்று இருந்தனர்.

Listen News!