• Jul 13 2026

முதல் முறையாக அண்ணாமலையின் ஆசையை நிராகரிக்கும் முத்து, மீனா.! குழப்பத்தில் விஜயா

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், அண்ணாமலை, வீட்டில் உள்ளவர்களிடம் தனது ஆசையை கூறுகிறார். அதாவது, பரணி வந்திருந்த நேரத்தில், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என அனைவரும் ஒன்றாக இருப்பதுதான் வாழ்க்கையை பூரணப்படுத்தும் என்று பேசுகிறார்.

அதன் பிறகு, ரவியையும் முத்துவையும் ரகசியமாக அழைத்து, குழந்தை விவகாரத்தில் என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்? எனக்கு சீக்கிரமே பேரக்குழந்தைகள் வேண்டும் என்று நேரடியாகவே கூறுகிறார்.

ஆனால், இதனை விஜயாவிடம் கூற வேண்டாம். அவர் மனோஜுக்கு திருமணம் முடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார். அதனால் இதைப் பற்றி அவரிடம் சொல்ல வேண்டாம் என்றும் கூறுகிறார். இதற்கிடையில், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் விஜயா தூரத்தில் நின்று ஒட்டுக்கேட்கிறார்.


இதனைத் தொடர்ந்து, அண்ணாமலை பேசிய விஷயங்களை முத்து மீனாவிடம் கூறுகிறார். அதற்கு மீனா, எனக்கும் ஆசைதான். ஆனால் இந்த வீட்டில் எனக்கும் உங்களுக்கும் ஒரு மரியாதை இல்லை. நாளை அதே நிலை எங்களுடைய குழந்தைக்கும் வரக்கூடும். அதனால் நாமும் ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு இதைப் பற்றி யோசிப்போம் என்று கூறுகிறார்.

மேலும், முதலில் மேல் மாடியில் ஒரு அறை கட்ட வேண்டும். அதற்குப் பிறகுதான் குழந்தையைப் பற்றி யோசிப்போம் என்றும் தெரிவிக்கிறார்.

அதேபோல், ரவியும் ஸ்ருதியிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேசுகிறார். அதற்கு ஸ்ருதி, நான் அப்போதே சொன்னதுதான். எப்போதும் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று தனது முடிவை அதிரடியாக கூறுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement