• Aug 08 2025

இலங்கைக்கு படையெடுத்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்..! நடந்தது என்ன.?

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையிசை உலகின் முன்னணி பாடகர் ஶ்ரீநிவாஸ், இலங்கையின் வட பகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஒரு சிறப்பான இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொருட்டு இன்று யாழ் சர்வதேச விமான நிலையம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். இவருடன் இன்னும் பல பிரபல கலைஞர்களும் யாழை அடைந்துள்ளார்கள்.


இந்த இசை நிகழ்ச்சி, சாதாரணமான ஓர் இசை நிகழ்வல்ல. இதன் பின்னணியில் மகத்தான நோக்கம் ஒன்று உள்ளது. இந்த மாபெரும் இசைநிகழ்ச்சி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் (Medical Faculty Student Union) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


மருத்துவ மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக ஒரு புதிய பேருந்து கொள்வனவு செய்ய வேண்டிய நிதியை திரட்டுவதற்காகவே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இசை நிகழ்ச்சி நாளை ஜூலை 19, மாலை 6.00 மணிக்கு, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் யாழ் மக்கள் மட்டுமல்லாது சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்தும் ரசிகர்கள் குவிந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement