• Jan 19 2025

பாலிவுட் மெகா ஸ்டாருக்கு திடீரென என்னாச்சு? பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அமிதாப் பச்சன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அன்றும் இன்றும் என்றும் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகவே திகழ்ந்து வருகிறார்.

1970 களில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக கருதப்பட்டார். 

இவருடைய நடிப்பு திறமைக்கு தேசிய விருது, பிலிம்பேர் என பல விருதுகளை வாங்கி இருக்கிறார்.  இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர் என பன்முகம் கொண்டு இருக்கிறார்.



இந்த நிலையில்,  நடிகர் அமிதாப் பச்சன் பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



அதன்படி நடிகர் அமிதாப் பச்சனுக்கு மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமிதாப் பச்சன் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த தகவல் பாலிவுட் பிரபலங்களை மட்டுமின்றி ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தி இருந்தது.

இதைத் தொடர்ந்து இன்று மதியம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.



Advertisement

Advertisement