• Apr 01 2025

BTS பாய்ஸ் இசை மழையில் நனைய நீங்கள் தயாரா? புது புதுசா யோசிப்பாங்களோ..

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு காலத்தில் நம் இசைஞானி  இளையராஜாவின் இசைக்கு அடிமையாகி கிடந்த இளைய சமுதாயம் கடந்த சில ஆண்டுகளாக இரைச்சல் இசைக்கும் இடைவிடாத நடனத்துக்கும் பெயர் போன BTS இன் கொடிய பாடல்களுக்கு அடிமையாகி கிடப்பதாக தகவல் வெளியாகுகின்றது.

RM , JIN , SUGA , J-HOPE , JIMIN ,  V , JUNG KOOK என்கிற தென்கொரியாவை சேர்ந்த ஏழு இளம் இசை கலைஞர்களின்  நடனங்களும் ,பாடல்களும் , இசைகளும் 2K  கிட்ஸ் பலரது தூக்கத்தை கெடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

காலத்துக்கு காலம் இசை ரசனை மாறக்கூடியது என்றாலும் மொழி கடந்தும் நேசிக்கும் அளவுக்கு BTS குழுவினரின் நடன அசைவுகள் , உடைகள் , சிகை அலங்காரம் போன்றவை இளசுகளை வெகு விரைவாக கவர்ந்து விட்டது என்றே கூறலாம்.


இந்த நிலையில், BTS பாடகர்  V அவர்களினால் சோலோவாக பாடப்பட்ட FRI(END )S  என்ற பாடலானது தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த சில காலங்களாக இவர்களின் பாடல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது வெளியாகிய இப் பாடல் BTS ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Advertisement

Advertisement