• Feb 05 2025

பிரபல இயக்குநர் மறைவு! திரைபிரபலன்கள் இரங்கல்... !

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் எஸ்.டி. சபாபதி தட்சிணாமூர்த்தி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவரின் இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 


நடிகர் விஜயகாந்தின் ‘பரதன்’ படம் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான சபா, அதன் பின்னர் பிரசாந்த் நடித்த ‘எங்க தம்பி’, லிவிங்ஸ்டன் நடித்த ‘சுந்தர புருஷன்’, பிரபு தேவா நடித்த ‘விஐபி’ போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.  


தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடத்திலும் பல படங்களை இயக்கியுள்ளார். பலரது மனதில் நீங்காத இடம் பிடித்த இவரது மறைவுக்கு திரையுலகினர் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement