• Sep 06 2026

அஜித்தும் விஜய்யும் செய்தது சாதாரண விஷயமே கிடையாது.. ஜி.வி.பிரகாஷ் ஓபன்டாக்.!

shali / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித் மற்றும் விஜய் குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், இருவரின் திரைப்பயணம் குறித்தும், அவர்கள் எடுத்துள்ள முடிவுகள் குறித்தும் தனது பார்வையை பகிர்ந்துள்ளார்.

அதில் பேசிய ஜி.வி.பிரகாஷ், “ஒரு இடத்தில் பீக்கில் இருந்துவிட்டு, மற்றொன்றைத் தேடிச் செல்வது, அஜித் சாராக இருந்தாலும் சரி, விஜய் சாராக இருந்தாலும் சரி.. இது நடக்கவே நடக்காது என்று நினைத்ததைக்கூட நடத்திக் காட்டிவிட்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், அஜித் மற்றும் விஜய் இருவரிடமிருந்தும் தாம் ஒரு முக்கியமான விஷயத்தை கற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரே இடத்தில், ஒரே மாதிரியான கட்டமைப்புக்குள், பாதுகாப்பான வளையத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் இல்லை என்றும் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

தொடர்ந்து, “அதைத்தான் நானும் நினைக்கிறேன். இதை இவர்களிடமிருந்து ஒரு பெரிய உத்வேகமாக நானும் எடுத்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், அஜித் மற்றும் விஜய் தங்களுக்கென தேர்ந்தெடுத்த வெவ்வேறு பாதைகளில் வெற்றியைப் பெற்றுவிட்டார்கள் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உச்சத்தில் இருந்தபோதும் புதிய பாதைகளை தேர்வு செய்த அஜித் மற்றும் விஜய்யை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement