லோகேஷ் கனகராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘டிசி’ திரைப்படம் தொடர்பான சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இப்படத்தின் கதை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டதாகவும், அந்த சமயத்தில் கதாநாயகனாக நடிகர் சித்தார்த்தை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாகவும் ஒளிப்பதிவாளர் முகேஷ் ஜி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், ‘டிசி’ திரைப்படத்திற்கான கதை உருவான காலகட்டம் குறித்தும், அந்த படத்தை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட முயற்சிகள் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். அப்போது சித்தார்த்தை கதாநாயகனாக வைத்து இப்படத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த கதையை அதிகாரபூர்வமாக திரைப்படமாக தொடங்குவதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாகவும் முகேஷ் ஜி தெரிவித்துள்ளார். பின்னர் பல ஆண்டுகளுக்கு பிறகு அதே கதையை லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒரு தசாப்தத்திற்கு முன்பே உருவான கதை, தற்போது வேறொரு நடிகரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, இந்த கதையில் சித்தார்த் நடித்திருந்தால் படம் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வியும் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதமாகி வருகிறது. முகேஷ் ஜியின் இந்த தகவல் தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!