• Aug 06 2025

நடிகர் சங்கக் கட்டிடம் சீக்கிரமே திறக்கப்படும்.!பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் உறுதி.!

Roshika / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் விஷால், கடந்த ஒன்பது ஆண்டுகளாக காத்திருந்த நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.மேலும் ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும் என்றும்  இது 1979ம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி எம்.ஜி.ஆர் திறந்து வைத்த கட்டிடத்தின் வரலாற்றை மீண்டும் நினைவூட்டும்," என அவர் கூறினார்.


இந்த கட்டிட வளர்ச்சியில் நடிகர் கார்த்தி அளித்த முக்கிய பங்களிப்பை விஷால் பாராட்டினார். “நான் ஒன்றும் தனக்கென்று செய்தது கிடையாது. எல்லோரும் சேர்ந்து, விடாமுயற்சியுடன் உழைத்ததால் தான் இன்று இது சாத்தியமாகியுள்ளது,” என்றார்.

மேலும் அவர் கூறும் போது "சின்ன படங்களுக்கு விமர்சனங்கள் இல்லாததால் அவை கவனிக்கப்படாமலே போய்விடும் நிலை உருவாகி இருப்பதை" அவர் வருத்தத்துடன் கூறினார். "ஒரு வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களாவது "பிரீதிங் ஸ்பேஸ்" கொடுத்தால் விமர்சனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என அவர் தெரிவித்தார்.


அத்துடன், பழைய காலத்தில் ஆட்டோ டிரைவர்கள் சொல்வதை நம்பி மக்கள் திரையரங்குகள் சென்ற அந்த கலாச்சாரம் இன்று இல்லை என்றும், தற்போது கமலா திரையரங்கில் அவர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தற்போது, விஷால் தன் 35வது படமாக, இயக்குநர் ரவிவர்மாவுடன் கூடி, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது தயாரிப்பை செய்கிறார். இது ஒரு புதிய ஜானரில், தனித்துவமான கதைக்களத்தோடு வெளிவர உள்ளது. “எளிய படமா, பெரிய படமா என்பது மக்கள் வரவேற்பு தான் தீர்மானிக்கும்,” என அவர் கூறினார்.

Advertisement

Advertisement