• May 09 2026

விரைவில் வெளியாக ரெடியாய் இருக்கும் விக்ரமின் "தங்கலான்" ட்ரைலர் !!

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனங்களின் இணைத்தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் விக்ரமின் 61 வது படமான "தங்கலான்" திரைப்படமானது தமிழில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவர இருக்கும் திரைப்படமாகும்.

trailer censored; Release date ...

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க துணை கதாபாத்திரங்களில்  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான பசுபதி,டேனியல் கால்டாகிரோன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப் படத்தின் பாடல்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாவே உள்ளது.

Vikram-starrer 'Thangalaan' to now ...

அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பேசிய ஸ்டுடியோ க்ரீன் தலைமை நிர்வாக அதிகாரி தனஞ்செயன் "தங்கலான்" படமானது வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என உறுதிப்படுத்தியிருந்தார்.


அத்துடன் மேலும் "தங்கலான்" படத்தை பற்றிய உரையாடலில் படத்திற்கான இசை மற்றும் டிரெய்லரையும் முடித்துவிட்டதாக கூறியிருந்தார்.இச் செய்தியறிந்த ரசிகர்கள் ட்ரைலர் மற்றும் பாடல்களுக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக கூறிவருகின்றனர்.

Advertisement

Advertisement